firebharathi

Thursday, March 15, 2012

சங்கரன்கோவில் பொதுமக்களே

என் அருமை சங்கரன்கோவில் பொதுமக்களே  ,
                                                                                                   கடந்த சட்டசபை தேர்தலில் மிகச் சிறந்த முடிவை அளித்த உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் , தற்பொழுது மற்றுமொறு அற்புதமான வாய்ப்பு உங்களை தேடி வந்திருக்கிறது , இந்த முறை அ.தி.மு.க - வை  தோற்க்கடித்து அவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி , ஒரு நல்ல ஆட்சியை வழங்க வலியுறுத்தும் பொருட்டு அவர்களை தோற்க்கடித்து தமிழகத்திற்கு ஓர் அற்புதமான முடிவை  நீங்கள் வழங்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுகொள்கிறேன் .   நன்றி . . . . . . .


நட்புடன் . . . . . . .
பாரதி


Monday, February 6, 2012

வெட்கப்படும் நேரம் இது . . . . .

வெட்கப்படும் நேரம் இது . . . . .

தே . மு. தி. க வுடன் கூட்டணி வைத்ததிற்காக நான் வெட்கப்படுகிறேன் , வருத்தப்படுகிறேன்  - ஜெயலலிதா

அ . தி . மு . க வுடன் கூட்டணி வைத்ததிற்காக நான் வேதனைபடுகிறேன் வருத்தப்படுகிறேன்- விஜயகாந்த்

தி . மு . க . வுடன் கூட்டணி வைத்ததிற்காக வெட்கப்படுகிறோம் -காங்கிரஸ் (ஞானசேகரன்)

காங்கிரஸ் வுடன் கூட்டணி வைத்ததால்தான் தி . மு. க தோற்றது அதற்காக வருந்தப்படுகிறோம் - தி மு க

உங்களுக்கெல்லாம் ஒட்டு போட்டதிற்காக நங்கள் உண்மையிலேயே வெட்கப்படுகிறோம் , அசிங்கப்படுகிறோம் நடுத்தெருவில் நிற்கிறோம் -மக்கள்


Monday, January 2, 2012

தம்பி விமர்சனத்திற்கு நன்றி . . .

தம்பி விமர்சனத்திற்கு நன்றி . . .
                                                              
 

 ஒளிவு மறைவின்றி மனதில்  தோன்றியதை வெளிபடையாக விமர்சித்த உனது தைரியத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .நான் எந்த கட்சியின் சார்பாகவும் அதை எழுதவில்லை அது முழுதுவதும் அன்றைய உடனடி தேவைக்காக எழுதியது . எப்பொழுதும் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை சுட்டி காட்டுவது தான் என் வேலை  இப்பொழுதும் ஜெயலலிதா செய்யும் தவறுகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன் , ஜெயலலிதா செய்யும் அனைத்தும் மக்கள் விரோத நடவடிக்கை தான் என்பதை நான் மறுக்கவில்லை , நாட்டின் பொருளாதரத்தை உயர்த்துவதற்கு பணக்காரர்களை குறி வைத்து இருக்கலாமே ஒழிய மாறாக ஏழையின் வயிற்றில் அடித்ததை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் . ராஜாவின் மனைவி பற்றி கூறியதற்கு நான் இப்பொழுது வருத்தபடுகிறேன் ஆனால் அன்றைய நிலவரத்தில் எனக்கு இருந்த கோபத்தில்  இதை விட கோபமாக எழுத எனக்கு வேறு வார்த்தைகள் எனக்கு கிடைக்கவில்லை , காரணம் அவர் கொள்ளை அடித்தாரா இல்லையா என்பதற்கு அல்ல ,  அவர் அந்த விசயத்தில் காட்டிய அலட்சியத்திற்கு
  தான்  அவ்வளவு கோபம் மற்றபடி ஒன்றும் இல்லை . நன்றி தம்பி துணிவை கூறியதற்கு . மேலும் அனுப்பு . . ..


நட்புடன்
பாரதி . . . . . . . 



  


 

 
punch dialogue.

 ANNA HAZARE

Anna hazare fast
he dosn't taste even roast
suddenly got pain in chest
finally comes to waste

congress think anna as ghost
b'coz he is india's boost
police ready to arrest
if he made any twist

East west
he is the best
among the worst.

Monday, March 28, 2011

வறுமையின் பிடியில் ஸ்டாலின்

நண்பர்களே வணக்கம் , 

                                                ஒரு அவசர தேவை உங்களால் முடிந்த உதவியை உடனே அளியுங்கள்  , நம் நாட்டில் ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த உலகையே அழிக்கலாம் அப்படி இருக்கையில் நம் தமிழகத்தை ஆளும் துணை முதல்வர் வறுமையில் வாடும் பொழுது நமது இதயம் பதறுகிறது , அவரை நாம் காப்பாற்ற வேண்டாமா ? அவர் பாவம் இல்லையா ! , சோற்றுக்கு கூட வழி இல்லாமல்  மற்றவர்களிடம் கடன் வாங்கி வைத்திருக்கிறார் , அவருக்கு நாம் உதவ வேண்டாமா ?. ஆகவே நண்பர்களே என்னால் , உங்களால் முடிந்த உதவிகளை செய்து" ஒரு கோடியே நாற்பது லட்சம்" மட்டும் சொத்துக்கள்  வைத்திருக்கும்  துணை முதல்வர் ஸ்டாலினை வறுமையில்  இருந்து காப்பற்றி அவருக்கு நாம் வாழ்வளிக்க வேண்டும் இல்லையெனில் அவர் பட்டினியால் மாண்டு விடுவார் என்பது மட்டும் நிஜம் .  ஸ்டாலினை காப்பாற்ற என் கை இருப்பில் இருந்து ஒரு ரூபாய் தருகிறேன் , நீங்களும் தந்து அவரை வாழ வையுங்கள், அவருக்காக உங்களிடம் கெஞ்சும் .. . .

உங்கள் நண்பன் பாரதி . . . . . . . . 

Wednesday, March 16, 2011

டோனி மீது கோபத்துடன் உங்கள் நண்பன் பாரதி.

வணக்கம் நண்பர்களே ,   
               நாம் இவ்வளவு நாட்களாக திறமையான கேப்டன் என்று நினைத்திருந்த டோனி தான் திறமை அற்றவர், வெறும் அதிர்ஷ்டசாலி மட்டும் தான் என்ற உண்மையை இப்பொழுது உணர்த்தியிருக்கிறார் . கேப்டன் என்றால் திட்டமிட்டு அணியை வழி நடத்துபவர் என்று பொருள் ஆனால் எந்த ஒரு திட்டமிடுதலும் இன்றி தன் போக்கிற்கு செயல் படுகிறார் . "காட்டான்"  யூசுப் பதானை அணியில் சேர்த்த பொழுதே நம்பிக்கையை இழந்து விட்டார் டோனி , யூசுப் பதானை சேர்ப்பதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டவர் சுரேஷ் ரெய்னா , யூசுப் பதான் சுரேஷ் ரெய்னா விற்கு சமமானவரா?. எப்பொழுதாவது காட்டுத்தனமாக விளையாடும் யூசுப் பதானை வைத்துக்கொண்டு சிறப்பாக விளையாடகூடிய    ரெய்னாவை சேர்க்காதது ஆச்சர்யம் , ரெய்னா ஒரு சிறந்த பீல்டர் , துடிப்பானவர் ஆனால் பதானோ களிமண் ,  சொங்கி , காட்டான்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் திறமையானவர்களுக்கு கிடைப்பதில்லை . இது ஒருபுறம் இருக்கட்டும் திறமையாக , மிகவும் சிறப்பாக, ஒவ்வொரு போட்டியிலும்  ஆடிகொண்டிருந்த விராத் ஹோலி  யை  காலி செய்து விட்டார் டோனி , தேவை இல்லாமல் பதானை முன் வரிசையில் இறக்கி கோலி யை காலி செய்து விட்டார் , இனிமேல் கோலி முன்போல் விளையாடுவாரா என்பது சந்தேகமே ? ஒருவேளை அவர் தன்னம்பிக்கையை இழந்திருந்தால் என்ன செய்வது ?. பந்து வீச்சாளர்களை சுதந்திரமாக செயல்படவிடுவது நல்லது தான் அதற்காக எந்த ஒரு அறிவுரையும் வழங்காமல் சுதந்திரம்  கொடுபதற்க்கு கேப்டன்  என்ற பொறுப்பு எதற்கு ?. எப்படி பட்ட பந்துகளை எதிர்கொள்வதற்கு கஷ்டமாக இருக்கும் என்று  batsman களுக்கு   நன்றாக தெரியும் , அப்படி பட்ட பந்துகளை வீசும்படி அறிவுறுத்த வேண்டும் அதை விட்டுவிட்டு நன்றாக அடிப்பதற்கு ஏற்ற வகையில் o.p பந்துகளாக வீசுகிறார்கள் முனாப் படேல் மற்றும் ஆஷிஸ் நேரா. இவர்கள் யாருக்கு நன்றாக பந்த் வீசுவார்கள் என்றே தெரியவில்லை batsman களுக்கும் சரியாக பந்து வீசுவதில்லை , bowler  களுக்கும் சரியாக பந்து  வீச தெரியவில்லை பின் எதற்காக இவர்கள் ? எருமை சாணியை முகத்தில் அப்பியது போன்றதொரு reaction இவர்களிடத்தில்  . கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் டோனி உண்மையில் அவர் கூலாக இருப்பதில்லை , அவர் "களிமண்ணாக" இருப்பது நமக்கு பார்ப்பதற்கு கூல் போன்று தெரிகிறது என்பது தான் நிஜம் . இதுவரை இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்திருந்த நாம் இனி திறமையாய் விளையாடும் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நிலை உருவாகி இருக்கிறது , அந்த திறமைக்குள் இந்தியா வருமா என்பது இப்பொழுது பெரும் சந்தேகமே ?

டோனி மீது கோபத்துடன் உங்கள் நண்பன் பாரதி. . . . . . .

நாமும் நம்முடைய ஓட்டும்

வணக்கம் நண்பர்களே ,
                         வளமிக்க நாடு எங்கள் தமிழ் நாடு . ஆம் இதுவரை 7 .5 கோடி வரை பிடிபட்டுள்ளது எங்கள் அரசில்வாதிகளின் தேர்தல் வழிச்செலவு  பணமும் பொருளும்.  இது தொடக்கம் மட்டும்தான்.

.........

நாளுக்கு நாள் பிடிபடும் ரொக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போய்கொண்டிருக்கிறது  . தமிழகத்தில், ஒரு நாளைக்கு மட்டும்  50 லட்சத்திற்கும் அதிகமாக   பிடிபடுகிறது. இது வெறும் தொடக்கம்தான். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல்வாதிகளிடம் இருக்கும் கருப்பு பணங்களின் சிறு துகள்கள் மட்டும்தான் இப்படிப்பட்ட நேரங்களில் வெளியே தலையெடுக்க  தொடங்குகிறது.
ராசாவின் கைவரிசையில் நாம் இழந்தது ஒரு பகுதி மட்டுமே. ராசா குறைந்த விலையில் நமக்கு சேரவேண்டிய சலுகைகளை, வசதிகளை தன்னுடைய லாபத்திற்காக விற்றான் . இன்று தமிழகத்தில் அரசியல்வாதிகளின் வருங்கலதிற்காக நம்மை விலை பேச நம் கண்முன்னே பல லட்சங்களை கடத்திக்கொண்டு இருகிறார்கள். இவை அனைத்தும் நம்மை, நம்  மக்களை வாங்குவதற்காக எடுத்து செல்லப்படும் பணம்.

எவ்வளவு  கேவலமாக போய்விட்டோம் நாம்!!!.
கண்கட்டி வித்தை செய்யத்துடிக்கும் அரசியல்வாதிகளை விழ்த்தி நாம் ஒரு விலைபொருள் அல்ல என்று நிரூபிப்போம். ஆம் நண்பர்களே, இந்த தேர்தலை ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்துகொள்ள  வேண்டும். நமக்குள் விழிப்புணர்வு முதலில் ஏற்படவேண்டும் அதற்கு நம்மால் முடிந்த அளவு செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
அணைத்து நாளிதழ்களையும் புரட்டவேண்டும். செய்திகள் நம்முள் விழுப்புணர்வு ஏற்படுத்தும் .

 உங்கள் தொகுதியில் இவ்வாறு பணம் பட்டுவாடா செய்யபட்டால் அதற்கு உண்டான நடவடிக்கையை உண்மையான தமிழனாக இருந்து செய்யவேண்டும். அதற்கு நீங்கள் போலிசிடம் போகவேண்டி அவசியம் இல்லை. வரும் சூனியகாரர்களிடமிருந்து  பணமோ அல்லது அவர்களின் நடிப்பையோ எற்றுகொள்ளவேண்டாம். அவர்கள் முகத்திரையை கிழிக்கும் விதத்தில் கேள்விகள் கேட்டால் போதும். அதற்கு உண்டான முழு உரிமை நமக்கு உண்டு. நம் கேள்வி கேட்க அரம்பிகவேண்டிய நேரம் வந்துவிட்டது . இலவசமாக அளிக்கபட்டாலும்  அது எதற்கு என்ற எண்ணம் வரவேண்டும் . இலவசத்தை பெறுவதற்கு நாம் ஒன்றும் பிச்சைகாரர்கள் இல்லை.

எலும்பு துண்டுகளை போட்டால் இந்த  தமிழர்கள் ஒட்டு போட்டுவிடுவார்கள் என்று எவ்வளவு  கேவலமாக நினைதுவிடார்கள் போலும்.

 5 வருடத்திருக்கு ஒருமுறை வந்து,
வெட்கம் இல்லாமல் தனது நகைகளுக்கு அன்று மட்டும் விடுமுறைகொடுத்துவிட்டு ,
அற்புதமாக ஏழ்மை வேடமிட்டு
எண்ணத்தில் நம்மை பூசிகளாய் நினைக்கும் துரோகிகளுக்கு இம்முறையாவது நாம் விழித்துகொண்டோம் என தெரிய படுத்தவேண்டும்.

மக்கள்தான் அரசாங்கம், மக்கள்தான் எஜமானன் என்று அவர்களுக்கு சிறிது அச்ச்சமூட்டவேண்டும். நம்மிடம் ஒட்டு கேட்க அவர்கள் தயங்க வேண்டும் அப்படி ஒரு குடிமகன்களாக நாம் இருக்கவேண்டும்.
இலங்கையில் நம் இனம் அழியும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை . நாளை நாம் அனைவரும் அடிமைகளாய்  போகும் நாள் வரும் என்று தெரிந்தும் அதற்காக நாம் போராடாமல் இருக்கிறோம். இது மாறவேண்டும் .

அரசியல்வாதிகள் அரங்கேற்றும் நாடகத்தை நாம் அனைவரும் நமக்குள் பேசி ஆதங்கத்தை தீர்த்து  கொள்கிறோம். நமது ஆதங்கம் ஒரு போரட்டத்தின் தொடக்கமாய் உருவெடுக்க வேண்டும் .

நம் அனைவருக்குள்ளேயும்   இப்படிபட்ட ஆதங்கம் இருக்கிறது. இதை செயல்  படுத்தப்பட வேண்டிய நாளும் நெருங்கிகொண்டே வருகிறது.
நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் கடந்த 5 ஆண்டுகளில் நம் நாட்டில்  நடந்ததையும் இன்று நடந்து கொண்டு இருபதையும் நினைவில் வைத்து இம்முறை சுரண்டப்படும் தமிழகத்தை காப்பாற்ற நெஞ்சில் நெருப்புடன் முடிவெடுக்கவேண்டும்.

நாம் விரைவில் ஒன்று கூடுவோம் என்ற நம்பிக்கையில்....

shovin